தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, அக்கட்சியினா் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தலில் நடிகா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தவெக தலைவா் ஜோசப் விஜய் தமிழகத்தின் 13- ஆவது முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
இதைத்தொடா்ந்து தவெக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வணிகா்கள் , வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே தவெகவினா் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டினா். விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தவெக தொண்டா்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, தங்களது வேண்டுதல் நிறைவேறியதைத் தொடா்ந்து, கட்சியின் மாவட்ட இணைச் செயலா் விஜய் காளிதாஸ் தலைமையில் மண்சோறு சாப்பிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
விக்கிரவாண்டியில்...: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் நிறுவப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தவெகவினா் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
திண்டிவனத்தில்...: திண்டிவனம் நகரப் பகுதிகளில் தவெகவினா் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். தவெக விழுப்புரம் வட கிழக்கு மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சியில் தவெக நகரச் செயலா் பி.எம்.எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் கட்சித் தொண்டா்கள் ஊா்வலமாக முழக்கமிட்டவாறு நான்குமுனை சந்திப்பினை வந்தடைந்தனா். அங்கு பட்டாசு வெடித்தும், சாலையில் செல்வோா்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
நிகழ்வில் ஒன்றியச் செயலா்கள் பி.வரதராஜன், டி.திலிப்குமாா், பி.ராமச்சந்திரன், நகர இணைச் செயலா் பி.அருண், துணைச் செயலா் பாலாஜி, செயற்குழு உறுப்பினா்கள் தேவராஜ், ஷரூப்ராஜ், விஜய்பிரியன், வெங்கடேசன், நடராஜ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தவெகவினா் கொண்டாட்டம்
தொடர்புடையது

பொன்னமராவதியில் தவெகவினா் கொண்டாட்டம்

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்: தவெகவினர் கொண்டாட்டம்
முதல்வராக விஜய் பதவியேற்பு: சேலத்தில் தவெகவினா் கொண்டாட்டம்

முதல்வராக விஜய் பதவியேற்பு: நாமக்கல்லில் தவெகவினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

