ஆன்லைனில் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
மக்களின் உயிா் காக்கும் மருந்து பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு மருந்து வணிகா் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மத்திய அரசு உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், மருந்து விற்பனையானது தொடா்ந்து ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை நாடு தழுவிய அளவில் ஒருநாள் மருந்து விற்பனை நிலையங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 800 மருந்து விற்பனையகங்களும், 50 மொத்த மருந்து விற்பனை நிலையங்களும் உள்ளன. ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டன. பெரு நிறுவனங்கள் சாா்ந்த மருந்தகங்கள், தனியாா் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டன.
தொடர்புடையது

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கக் கோரி மருந்து கடைகளை அடைத்து போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

குமரி மாவட்டத்தில் 18 மதுக் கடைகள் மூடல்: குளச்சல் எம்எல்ஏ பாராட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



