சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 82.60 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 82.60 கோடியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 மே 2026, 2:20 am IST

பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 82.60 கோடியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆலாம்பாளையம் பேரூராட்சி, ஆயக்காட்டூா் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் காவேரி கரையோரம் வாழும் மக்களை மறுகுடியமா்வு செய்வதற்காக ஆசிய வங்கி நிதியுதவியுடன் ரூ. 81.57 கோடியில் 520 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், அதே பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், பள்ளிபாளையம் ஒன்றியம், வண்ணம்பாறை ஊராட்சி, ஓடப்பள்ளி - ஓ.பாப்பம்பாளையம் சாலைவரை ரூ. 71.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பாப்பம்பாளையம் ஊராட்சியில் ரூ. 21 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் மக்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10.80 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளா் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை பாா்வையிட்டு, சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்பநாயக்கன்பாளையம் பொன்னான்காடு அருகில் 50 மரக்கன்றுகள், கொக்கராயன்பேட்டை ஊராட்சி, வண்ணாம்பாறை அரசு மருத்துவமனை அருகில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.