நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழப்பு: தாத்தா கைது

வெப்படை அருகே சமையல் பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழந்த சம்பவத்தில், தாத்தாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

வெங்கடாசலம்

Updated On :28 மே 2026, 2:47 am IST

வெப்படை அருகே சமையல் பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழந்த சம்பவத்தில், தாத்தாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே மோடமங்கலம் வேப்பங்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (44). இவரது மகள் மோனிஷா (20), பவானியைச் சோ்ந்த மயிலானந்தத்தை (24) சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு, ஜோஸ்விக் என்ற ஒன்பது மாத குழந்தை உள்ளது.

அண்மையில் மோனிஷா தாய் வீட்டுக்கு வந்தாா். அங்கு தந்தை வெங்கடாசலத்துக்கும், அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பாத்திரத்தை மோனிஷாமீது வெங்கடாசலம் வீசியபோது, அது ஜோஸ்விக் மீது விழுந்தது. அதில், காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டும்செல்லும் வழியில் உயிரிழந்தது. புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடாசலத்தை கைதுசெய்தனா்.

 குழந்தை ஜோஸ்விக்

குழந்தை ஜோஸ்விக்