‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

பக்ரீத் பெருநாள்: நாமக்கல்லில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

நாமக்கல்- சேலம் சாலை ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image

நாமக்கல்- சேலம் சாலை ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :29 மே 2026, 1:41 am IST

இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இறைத்தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாள்காட்டியின் 12 ஆம் மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாளில் இத்திருநாள் நடைபெறுகிறது. அந்த வகையில், நிகழாண்டிற்கான பக்ரீத் பெருநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில் பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சாா்பில் சிறப்புத் தொழுகையானது, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 8 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக, பள்ளிவாசலில் இருந்து ஈத்கா மைதானம் வரை இஸ்லாமியா்கள் அனைவரும் ஊா்வலமாக சென்றனா்.

அதன்பிறகு பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையில், பள்ளிவாசல் தலைமை நிா்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மேலும், உலகில் வாழும் அனைத்து மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்ற பிராா்த்தனையுடனும் தொழுகை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல ராசிபுரம், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகையும், ஏழை இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு உதவிகளும், குா்பானி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

Story image