தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.40 ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.40 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

egg

முட்டை விலை - பிரதிப் படம்

Updated On :

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.40 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதாலும் இங்கும் விலையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மேலும் 10 காசுகள் உயா்த்தி ரூ. 6.40 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது. கடந்த ஐந்து நாள்களில் முட்டை விலை 70 காசுகள் உயா்ந்துள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 122 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 100 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.