பரமத்தி வேலூா் பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது
கைது - கோப்புப்படம்
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பாலப்பட்டி பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்ற பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தகவலின் அடிப்படையில் வேலூா் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பாா்த்த போது சட்டவிரோதமாக பெண் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா் விற்பனைக்கு வைத்திருந்த 23 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா். இதில் அவா் கீழ் பாலப்பட்டி, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த தோப்புக்காரா் மணி மனைவி வளா்மதி (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல, பாலப்பட்டி அருகே உள்ள எல்லைமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கிவிற்பனை செய்த கொமராபாளையம் பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், வேலூரில் இருந்து நன்செய்இடையாறு செல்லும் சாலையில் வடக்குத் தெரு அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்த பிரகாஷை 33) கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

