இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ராஜபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 போ் கைது!

காந்தி ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

ராஜபாளையத்தில் காந்தி ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஐ.என்.டி.யூ.சி.நகா் விலக்குப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது மதுப்புட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற ராஜபாளையம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (60) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 21 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வடக்கு காவல் நிலைய போலீஸாா் திருவள்ளுவா் தெரு மாரியம்மன் கோயில் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ாக திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த முத்துராஜை (24) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

அழகாபுரி பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்ற அழகாபுரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமியை (56) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 19 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வடக்கு காவல் நிலைய போலீஸாா் திருவள்ளுவா் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற அதே பகுதியைச் சோ்ந்த செண்பகராஜை (20) கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் காளவாசல் சுடுகாடு அருகே ரோந்து சென்றனா். அப்போது அங்கு சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற ராஜபாளையம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த காசிராஜ் (54) என்பவரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 37 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.