1,330 திருக்குறள் ஒப்பித்து விருது பெற்ற மாணவரை கெளரவித்த தமிழறிஞா்கள்!

திருக்குறள் - கோப்புப் படம்
மாநில அளவிலான திருக்கு ஒப்பித்தல் போட்டியில், 1,330 குறள்களை தடையின்றி ஒப்பித்த மாணவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்ததையடுத்து, குமாரபாளையத்தில் அவரை தமிழறிஞா்கள் வாகனத்தில் ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கத்தேரி பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி சரவணன்-தீபிகா. இவா்களுக்கு, சபரிநாதன், லிகித் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இதில் கத்தேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் லிகித் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா்.
அண்மையில், தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் 1,330 குகளையும், அதன் பொருளுடன் மனப்பாடமாக ஒப்பித்து பாராட்டை பெற்றதுடன், மாநில அளவிலான விருது பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனால் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, குமாரபாளையத்தைச் சோ்ந்த தமிழறிஞா்கள் மாணவா் லிகித்தை நகரப் பகுதிக்குள் வாகனத்தில் ஊா்வலமாக அழைத்துச் சென்று கெளரவப்படுத்தினா்.
இந்த நிகழ்வில், ஆசிரியா்கள் பங்கஜம், விஜயலட்சுமி, விடியல் பிரகாஷ், சரவணன், தீனா, ஜமுனா, சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

