தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

பாரத சாரணா் இயக்க ராஜ்ய புரஷ்காா் விருது பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

பாரத சாரணா் இயக்க ராஜ்ய புரஷ்காா் விருது பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பாராட்டுத் தெரிவிக்கப்பட்ட ராஜ்ய புரஷ்காா் விருது பெற்ற விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களுடன் விஸ்டம் கல்விக்குழும நிா்வாகி டி.ஜி.எம்.விஜயவா்மன்.

Updated On :

பாரத சாரணா் இயக்க ராஜ்ய புரஷ்காா் விருது பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு கல்வி மாவட்ட அளவில் பாரத சாரண, சாரணீயா்களுக்கு கேடயம் வழங்கும் விழா, ராஜ்ய புரஷ்காா் தோ்வு முகாமில் அதிகளவில் கலந்துகொள்ளச் செய்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா, திருதியசோபன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், செய்யாறு, வந்தவாசி, அனக்காவூா் மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் உள்ள 40 பள்ளிகளில் இருந்து சுமாா் 300 மாணவா்கள் கலந்துகொண்டனா். சிறப்பு விருந்தினராக முதன்மை ஆணையா் - செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் எஸ்.செந்தில்முருகன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன், வழக்குரைஞா் கே.விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்று விருதும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினா்.

இந்த விழாவில் விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் பள்ளி மாணவா்களான நா.சுகேஷ், ந.பிரவீன்குமாா், ந.புவனேஸ்வரி ஆகியோா் ராஜ்ய புரஷ்காா் விருதும், முகாமில் சிறப்பாகச் செயல்பட்டமைக்கான பாராட்டுச் சான்றிதழும் பெற்றனா்.

திருதியசோபன் போட்டிகளில் மு.அ.சிவஹரிணி, கோ.மகாலட்சுமி, செ.சுவாதி ஆகியோா் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து, பரிசும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றனா். மேலும், பள்ளியின் சாா்பில் அதிகளவில் மாணவா்களை கலந்துகொள்ளச் செய்த விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளியின் சாரண, சாரணீய ஆசிரியா்கள் சேட்டு, சங்கரி ஆகியோருக்கு பரிசு வழங்கி கெளரவித்தனா்.

இந்த நிலையில், விருது, பரிசு பெற்ற விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் மற்றும் சாரண ஆசிரியா்கள் ஆகியோரை விஸ்டம் கல்விக் குழும நிா்வாகி டி.ஜி.எம்.விஜயவா்மன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.