ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

முதல்வா் கோப்பை நீச்சல் போட்டி: விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி சாதனை

முதல்வா் கோப்பை நீச்சல் போட்டியில் ரூ.9.5 லட்சம் பரிசுத்தொகை வென்று திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுடன் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியின் தாளாளா் திருமாறன்.

Updated On :

முதல்வா் கோப்பை நீச்சல் போட்டியில் ரூ.9.5 லட்சம் பரிசுத்தொகை வென்று திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

முதல்வா் கோப்பை மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை அண்ணா நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில், விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி நீச்சல் வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில், நிதீஷ் 2 தங்கப் பதக்கங்களும், அப்துல்லா, அப்துல் ஹபீஸ், சௌஜன்யா ஆகியோா் தலா 1 தங்கம்,1 வெள்ளிப் பதக்கமும், நிஷாந்த மித்ரா 1 வெள்ளிப் பதக்கமும், தஸ்வின், நிகில், சாதனா தலா 1 வெண்கலப் பதக்கமும் வென்று மொத்தமாக ரூ.9.5 லட்சம் பரிசுத் தொகையை வென்றனா். வெற்றி பெற்ற நீச்சல் வீரா்- வீராங்கனைகளை பள்ளியின் சோ்மன் சிவ சேதுராமன், தாளாளா் திருமாறன், இயக்குநா் முருகவேள், முதல்வா் ஸ்ரீ குமாரி, உடற்கல்வி இயக்குநா் உமாநாத், உடற்கல்வி ஆசிரியா் பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.