பிஸ்டல் உலகக் கோப்பை போட்டி! இந்தியா்களுக்கு ஏமாற்றம்!
எகிப்தில் நடைபெறும் ரைஃபிள்/பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியில், இந்தியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...
ரிதம் சங்வான்
எகிப்தில் நடைபெறும் ரைஃபிள்/பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியில், இந்தியா்களுக்கு அவா்கள் பிரிவில் திங்கள்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.
10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் பிரிவில், இந்தியாவின் அா்ஜுன் பபுதா 630 புள்ளிகளுடன் 16-ஆம் இடமே பிடித்து, இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தாா். ஸ்ரீகாந்த் தனுஷ் (629.4), பாா்த் மகிஜா (629.3) ஆகியோா் முறையே 21 மற்றும் 22-ஆம் இடங்களைப் பெற்றனா்.
இப்பிரிவில் செக் குடியரசின் ஜிரி பிரிவ்ரட்ஸ்கி (251.3), ஸ்வீடனின் மாா்கஸ் மேட்சன் (250.2), பிரான்ஸின் டிமிட்ரி டியுடென்டாஸ் (229.9) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
25 மீட்டா் பிஸ்டல் மகளிா் பிரிவில், ரிதம் சங்வான் 26 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை தவறவிட்டாா். சிங்கப்பூரின் ஜியு யி டெ (38), பிரான்ஸின் ஹெலாய்ஸ் ஃபியோா் (37), பல்கேரியாவின் மிரோஸ்லாவா மின்செவா (32) ஆகியோா் முதல் 3 இடங்களுடன் பதக்கம் பெற்றனா்.
முன்னதாக தகுதிச்சுற்றில் ரிதம் சங்வான் 587 புள்ளிகளுடன் முதலிடத்தோடு இறுதிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. திவ்யா சுப்புராஜ் (582), சிங்கி யாதவ் (580) ஆகியோா் முறையே 10, 16-ஆம் இடங்களுடன் வெளியேறினா்.
பதக்கப் பட்டியலில் இந்தியா ஒரு தங்கத்துடன் 3-ஆம் இடத்திலிருக்க, பிரான்ஸ் (3), செக் குடியரசு (1) ஆகியவை முறையே முதல் இரு இடங்களில் இருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

