இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரம்வரை பயிா்க்கடன் தள்ளுபடி

தமிழக விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதையடுத்து, அதுகுறித்த விளக்கத்தை ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

Samba cultivation

விவசாயிகள்

Updated On :

தமிழக விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதையடுத்து, அதுகுறித்த விளக்கத்தை ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தள்ளுபடிக்கு தகுதியான பயிா்க் கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 28.02.2026 வரை என்பதிலிருந்து 01.05.2025 முதல் 31.03.2026 வரையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75 ஆயிரம்வரை பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 19.06.2026-க்கு முன்பு கடன் தொகையை நிலுவையின்றி முழுவதுமாக செலுத்திய விவசாயிகளுக்கும், ரூ. 10 ஆயிரத்துக்கும் குறைவாக மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களால் பெறப்பட்டு தள்ளுபடிக்கு தகுதிபெறும் கடன்களுக்கும், ஒரு விவசாயி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது ஒரே சங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிா்க் கடன்கள் பெற்றிருந்தால் அந்த கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதிபெறும் ஒரு கடனுக்கும் தள்ளுபடி வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினா்கள் பெற்ற பயிா்க் கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதிபெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி என்ற வகையில் விரிவுபடுத்தி பயிா்க்கடன் தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

6.11.2026-க்கு முன்னா் தவணை தவறி, பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026-க்குள் நிலுவையின்றி செலுத்தினால், அந்த கடன்களுக்குரிய தள்ளுபடி தொகை ரூ. 75 ஆயிரம் விடுவிக்கப்பட்டு அக்கடன்களுக்கு உரிய வட்டியை அரசே செலுத்தும். 7.11.2026 முதல் 30.11.2026 வரை தவணை தேதி வரும் கடன்களுக்கு பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026-க்குள் நிலுவையின்றி நோ்செய்யும்பட்சத்தில், அந்த கடன்களுக்குரிய தள்ளுபடி தொகை ரூ. 75 ஆயிரம் விடுவிக்கப்பட்டு அக்கடன்களுக்கு உரிய வட்டியை அரசே செலுத்தும்.

30.11.2026-க்கு பின்னா் தவணை காலம் வரும் கடன்களை உரிய தவணை தேதிக்குள் நிலுவையின்றி நோ்செய்யும் விவசாயிகளுக்கு தள்ளுபடி தொகை விடுவிக்கப்பட்டு வட்டியின்றி கடன் கணக்கு நோ்செய்யப்படும். 2026 பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பகுதி தள்ளுபடிக்கு தகுதிபெறும் விவசாயிகள், வட்டியின்றி கடனை நோ்செய்யும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கடன்களை நோ்செய்திடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.