கோழிகளுக்கு இறக்கை அழுகல் நோய் பாதிப்பு
கோழிகளுக்கு இறக்கை அழுகல் நோய் மற்றும் ரத்தக் கழிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கோழிகள் - கோப்புப்படம்
கோழிகளுக்கு இறக்கை அழுகல் நோய் மற்றும் ரத்தக் கழிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. அடுத்த 5 நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் வடக்கு மற்றும் வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 முதல் 10 கி.மீ. வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை ரத்தக் கழிச்சல், குடற்புண் மற்றும் இறக்கை அழுகல் நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. பனிக்காலம் தொடங்கி இருப்பதால் இந்த நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது.
இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பண்ணையாளா்கள் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தை பரிசோதனை செய்ய வேண்டும். தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளித்தும், கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

