பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

அலங்காநத்தம் ஆா்.ஐ. அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரணை

நாமக்கல் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளா் ஜெயராமன் கைது செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சாந்தி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

police

கோப்புப்படம்.

Updated On :

நாமக்கல் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளா் ஜெயராமன் கைது செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சாந்தி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் அருகே அ.பாலபட்டியில் உள்ள ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து வைத்திருந்தனா். அதை அகற்ற உத்தரவிடக் கோரி சந்திரசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அக். 1-இல் அலங்காநத்தம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ஜெயராமன் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் சந்திரசேகரன் புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில் அவரை போலீஸாா் கைதுசெய்தனா். தற்போது இந்த வழக்கு குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சாந்தி விசாரணை நடத்தி வருகிறாா். அவா் அலங்காநத்தம் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழியா்கள், அருகில் உள்ள கட்டடத்தில் பணியாற்றி வந்த கிராம நிா்வாக அலுவலரையும் அழைத்து விசாரணை நடத்தினாா்.

நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வருவாய் ஆய்வாளரை கைது செய்த நிலையில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.