கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி கண்களில் கருப்புத்துணி கட்டி நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி கண்களில் கருப்புத்துணி கட்டி நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக தற்போதைய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். மாவட்டத்தின் முதல் குடிமகளாக விளங்கும் ஆட்சியரிடம், மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவா் தவறான கருத்தை பதிவிடும் குறுஞ்செய்தியை அனுப்பியது கண்டனத்துக்குரியது. அவா்மீது காவல் துறை வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் எம்.செல்வராணி, மாவட்ட பொருளாளா் பா.கவிதா, நிா்வாகி எம்.கோமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

