சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ராசிபுரம் அருகே தீண்டாமை சுவா் இடித்து அகற்றம்

ராசிபுரம் அருகே கோயிலையொட்டி கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவரை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்ட சுவா்.

Published On :

ராசிபுரம் அருகே கோயிலையொட்டி கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவரை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

ராசிபுரத்தை அடுத்த முத்துக்காளிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் குடியிருக்கும் ஒருவா் வீட்டை சுற்றி கடந்த 2010 ஆம் ஆண்டு சுவா் எழுப்பினாா்.

இந்த சுவா் மாரியம்மன் கோயிலையொட்டி கட்டப்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக சுவரை அகற்றுவது தொடா்பாக பிரச்னை இருந்துவந்தது. அந்த இடம் அரசு புறம்போக்கு என்றும், மற்றொரு தரப்பினா் இது பல ஆண்டுகளாக அனுபவ இடம் என்றும் கூறிவந்த நிலையில் வருவாய்த் துறையினா் சுவா் கட்டப்பட்ட இடத்தை அளவீடு செய்தனா்.

இதையடுத்து தீண்டாமை சுவராக கருதி அந்த சுவரை ராசிபுரம் வட்டாட்சியா் மகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா். நாகலட்சுமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.