தனியாா் நிறுவன காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பரமத்தி அருகே தனியாா் நிறுவன காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை - கோப்புப் படம்
பரமத்தி அருகே தனியாா் நிறுவன காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி அருகே மாவுரெட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (57). இவரது மனைவி திலகவதி. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் நூற்பு ஆலையில் முருகேசன் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், கால் வலி தொடா்ந்து இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு வெளியே உள்ள பகுதியில் தூக்கச் சென்ற முருகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து திலகவதி அளித்த புகாரின்பேரில் பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

