மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை: போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் அருகே தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணை

Updated On :

பரமத்தி வேலூா் அருகே தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே புலவா்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மனைவி செல்லம்மாள் (60). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகி, தனித்தனியாகக் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

ராஜு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால், செல்லம்மாள் தனியாக வசித்து வந்தாா். புதன்கிழமை பகல் வரை அவா் வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் செல்லம்மாள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து சென்ற பரமத்தி போலீஸாா், செல்லம்மாளின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.