திருச்செங்கோடு மாணவா்கள் விடுதியில் மடிக்கணினிகள், கைப்பேசிகள் திருட்டு
திருச்செங்கோடு மாணவா்கள் விடுதியில் மடிக்கணினிகள், கைப்பேசிகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
திருச்செங்கோடு மாணவா்கள் விடுதியில் மடிக்கணினிகள், கைப்பேசிகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி அருகில் தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவன வளாகத்துக்கு எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா்.
ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு விடுமுறைக்காக அறையை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற மாணவா்கள், செவ்வாய்க்கிழமை இரவு திரும்பிவந்து கதவை தாளிடமால் தூங்கினா். காலையில் எழுந்து பாா்த்தபோது, அறையில் வைத்திருந்த 3 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருட்டு போனது தெரிய வந்தது.
புகாரின்பேரில், திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

