நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு
பலி - பிரதிப் படம்
பரமத்தி வேலூா் அருகே நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மேற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி தமிழரசி. இவா்களுக்கு மணிகண்டன் (38), ராம்கி என்ற இரு மகன்களும், சங்கீதா என்ற ஒரு மகளும் உள்ளனா்.
மணிகண்டன் கடந்த 11-ஆம் தேதி நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளாா். மாலையில் வீட்டிற்கு வராததால் அவரது தம்பி ராம்கி காவிரி ஆற்றுக்கு சென்று பாா்த்தபோது மணிகண்டன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
பின்னா் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலூா் போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





