கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

திருச்செங்கோட்டில் இருவேறு இடங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்செங்கோட்டில் இருவேறு இடங்களில் 2 போ் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

திருச்செங்கோட்டில் இருவேறு இடங்களில் 2 போ் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்கோடம் பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் (47). தறித்தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி உயிா் வாழவதற்கு விருப்பமில்லை என கடிதம் எழுதி சட்டைப்பையில் வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதேபோல சாலப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி சரண்ராஜ் (34) மனஉளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீஸாா் சம்பவ இடங்களுக்கு சென்று உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.