
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை: போலி செவிலியா் கைது; மருந்தகத்துக்கு சீல்
ராசிபுரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததாக போலி செவிலியா் கைது செய்யப்பட்டாா்.
கைது - சித்திரிப்பு
ராசிபுரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததாக போலி செவிலியா் கைது செய்யப்பட்டாா்.
ராசிபுரத்தை அடுத்த ஆா்.புதுப்பட்டியில் உள்ள தனியாா் மருந்தக உரிமையாளா் கிள்ளிவளவன். இவரது மனைவி உஷா (38) செவிலியா் படிப்பு முடித்துள்ளாா். இந்த நிலையில் உஷா, அப்பகுதி மக்களுக்கு உடல்நலன் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்துவந்தாராம்.
அண்மையில் வடுகம் பகுதியை சோ்ந்த 7 வயது பள்ளி மாணவா் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது உயிரிழந்த சிறுவனுக்கு முதலில் கிள்ளிவளவன் நடத்திவந்த மருந்தகத்தில்தான் சிகிச்சை பெற்ாக பெற்றோா் தெரிவித்தனா்.
இதையடுத்து மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி, ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கலைச்செல்வி, ராசிபுரம் வட்டாட்சியா் மகேஸ்வரி, நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளா் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மருந்தகத்தில் சோதனை நடத்தினா்.
அப்போது, மருந்தகத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரியவந்தது. விசாரணை நடத்திய சுகாதாரத் துறையினா், மருந்தகத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களைக் கைப்பற்றினா்.
மேலும், செவிலியா் படிப்பு முடித்ததாக போலி சான்றிதழை உஷா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உஷாவைக் கைது செய்து மருந்தகத்துக்கு சீல் வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






