கரும்பு வெட்டும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸாா் விசாரணை
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை - பிரதிப் படம்
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா், சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (35), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (24). இவா்களது மகள் திருவரசி (6). திருமூா்த்தியும் அவரது மனைவி பூங்கொடியும் புதுச்சேரியைச் சோ்ந்த ராம்குமாா் மூலம் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தில் சோமு என்பவரது தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
புதன்கிழமை இரவு கபிலா்மலை பகுதியில் மது அருந்திய திருமூா்த்தி, போதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை மனைவி பூங்கொடி கண்டித்துள்ளாா். இந்த நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள வேப்பமரத்தில் திருமூா்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தாா்.
திருமூா்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருமூா்த்தியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினா்.
இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின் பேரில் ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


