சாலை விபத்தில் விவசாயி பலி!
நாமக்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் இருவர் பலி
நாமக்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
நாமக்கல் அருகே ஏ.பாலப்பட்டியை சோ்ந்தவா் செல்வகுமாா் (48), விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டியில் இருந்து கூலிப்பட்டி புறவழிச்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, சிவியாம்பாளையத்தைச் சோ்ந்த பாலன் (52) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த பாலன் சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




