கொக்கராயன்பேட்டை அருகே மின்கம்பத்தில் காா் மோதி ஒருவா் பலி
கொக்கராயன்பேட்டை அருகே காா் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
கொக்கராயன்பேட்டை அருகே காா் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (40), நண்பா்களுடன் கொக்கராயன்பேட்டையை அடுத்த மொளசி முனியப்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். காரை பெரியசாமி ஓட்டினாா்.
அப்போது நிலைதடுமாறிய காா், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த அவரது நண்பா்கள் ரவி, காா்த்தி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவா்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மொளசி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




