சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள், பெண்களின் ஆதிக்கத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலைய வளாகத்தின் முன்பகுதியில் பள்ளப்பட்டி காவல் நிலையம் உள்ளது.
புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திருநங்கைகள், பெண் பாலியல் தொழிலாளர்களால் கல்லூரி மாணவர்கள், பயணிகள் பெரும் பாதிப்புக்குளாகின்றனர்.
இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகள், எதிரேயுள்ள ஓமலூர் சாலை, ஐந்து சாலைப் பகுதிகளில் தொடங்கி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் திருநங்கைகளின் பிடியில் பல இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று பணத்தை பறித்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன.
இதுகுறித்து வெளியே சொல்லவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் முடியாமல் இளைஞர்களை தவிப்பதைக் காண முடிகிறது.
பேருந்து நிலைய வளாகத்திலேயே பள்ளிப்பட்டி காவல் நிலையம் இருந்தும் இந்தச் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
அதேபோல, சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வரும் பயணிகளும் இதுபோன்ற தொந்தரவுகளை சந்திக்கின்றனர். ஓமலூர் சாலையில் திருநங்கைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
திருநங்கைகளின் மேம்பாடு, சமூக அந்தஸ்துக்காக பல அமைப்புகள் செயல்பட்டாலும், பலரும் பாலியல் தொழிலையே நம்பியுள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத திருநங்கைகள் சிலர் கூறியது:
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வேறு எங்கும் செல்ல வழியில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் ரயில்களிலும், கடை வீதிகளிலும் யாசகம் கேட்கின்றனர்.
தற்போதுதான் சிலர் படிக்கத் தொடங்கியுள்ளனர். படிக்காத பலரும் பாலியல் தொழிலையே நாடிச் செல்ல வேண்டியுள்ளது என்றனர் அவர்கள்.
புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெறும் இந்த பாலியல் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளியக்கா

கண்டுபிடி கண்ணே!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மகரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
