மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அக்டோபர் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, பாசனப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் விடப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அணையிலிருந்து நீர் திறப்பு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாகவும், புதன்கிழமை காலை நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டது. அணைக்கு நொடிக்கு 4,141 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 84.98 அடியாகவும், நீர் இருப்பு 47.09 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.