விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சரபங்கா ஆற்றில் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் புகார்

ஓமலூர் பேருந்து நிலைய கழிப்பிடங்களில் இருந்து மனித கழிவுகள் நேரடியாக சரபங்கா ஆற்றில் கலந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:32 am

ஓமலூர் பேருந்து நிலைய கழிப்பிடங்களில் இருந்து மனித கழிவுகள் நேரடியாக சரபங்கா ஆற்றில் கலந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
ஓமலூர் பேருந்து நிலையத்துக்கு சுற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், சேலம்,  தருமபுரி, மேட்டூர்,  ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பல்வேறு வேலைகளுக்காக சென்று வருகின்றனர். பேருந்து நிலையத்தில் இரண்டு கட்டணக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்தக் கழிப்பிடங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் டேங்குகள்உடைந்தும்,  நிரம்பியும், சுத்தம் செய்யாமலும் உள்ளது. இதனால், இந்த கழிப்பிடங்களில் இருந்து மனிதக் கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள சரபங்கா ஆற்றில் கலந்து வருகிறது. மேலும், ஓமலூர் பேருந்து நிலையம்,  தினசரி காய்கறிச் சந்தை ஆகிய பகுதிகள் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு  ஏற்பட்டு வருவதாக வேதனையுடன் காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் பேரூராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம், சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் இருப்பதால் அந்த பகுதிக்குவரும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலையத்திலேயே கழிப்பிடக் கழிவுநீர் சாக்கடையில் கலந்து செல்வதால், இந்தப் பகுதிக்கு வரும் பொதுமக்கள் மூக்கை பொத்தி கொண்டு செல்கின்றனர். இப் பிரச்னையில் ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.