குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு பற்றி...

News image

முதல் பார்வை போஸ்டர் - X

Updated On :30 ஏப்ரல் 2026, 11:56 am IST

நடிகை கீர்த்தி சுரேஷும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கினும் நடித்துள்ள புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பரில் பூஜையுடன் தொடங்கியது.

வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், எதிர் தரப்பு வழக்கறிஞராக மிஷ்கினும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் பெயரையும் படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்துக்கு “சத்தியவான் சாவித்திரி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Story image

முதல் பார்வை போஸ்டரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், யாராலும் தடுத்து நிறுத்த முடியாத சக்தி, தற்போது அவளுடைய ஆட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில், ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

Summary

Keerthy Suresh and Mysskin's Film Title Announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.