நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் உடன் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பரில் தொடங்கியது.
வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது.
கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார்.
இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் தலைப்பு, முதல்பார்வை போஸ்டர் நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “சக்தி வாய்ந்த ஒன்று உங்கள் வழியில் வரவிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Summary
Keerthy Suresh – Mysskin Film: Title and First Look Poster Update!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்சள் சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் வாக்களித்தார்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
தனுஷ் படத்தின் புதிய அப்டேட்
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு


