எடப்பாடியில் நகைக் கடையில் திருடியதாக மதுரையைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடியை அடுத்த வெள்ளக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடைவீதியில் நகைக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு வந்த இரு இளைஞர்கள் வெள்ளி நகை வேண்டும் என்று கேட்டனர். கோபால் நகையை எடுக்கச் சென்றபோது கடையில் இருந்த பணப் பையைத் திருடிக் கொண்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோபால், எடப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சேலம் - எடப்பாடி சாலையில் நடந்த வாகனச் சோதனையில் சந்தேகப்படும்படியாக வந்த இரு இளைஞர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள், மதுரை, வண்டியூரைச் சேர்ந்த ராஜு மகன் ரவி (28), அவரது தம்பி சங்கர்(23) என்பதும், இருவரும் சேர்ந்து நகைக் கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

