ஓமலூர் பேருந்து நிலைய கழிப்பிடங்களில் இருந்து மனித கழிவுகள் நேரடியாக சரபங்கா ஆற்றில் கலந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓமலூர் பேருந்து நிலையத்துக்கு சுற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், சேலம், தருமபுரி, மேட்டூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பல்வேறு வேலைகளுக்காக சென்று வருகின்றனர். பேருந்து நிலையத்தில் இரண்டு கட்டணக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்தக் கழிப்பிடங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் டேங்குகள்உடைந்தும், நிரம்பியும், சுத்தம் செய்யாமலும் உள்ளது. இதனால், இந்த கழிப்பிடங்களில் இருந்து மனிதக் கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள சரபங்கா ஆற்றில் கலந்து வருகிறது. மேலும், ஓமலூர் பேருந்து நிலையம், தினசரி காய்கறிச் சந்தை ஆகிய பகுதிகள் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக வேதனையுடன் காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் பேரூராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம், சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் இருப்பதால் அந்த பகுதிக்குவரும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலையத்திலேயே கழிப்பிடக் கழிவுநீர் சாக்கடையில் கலந்து செல்வதால், இந்தப் பகுதிக்கு வரும் பொதுமக்கள் மூக்கை பொத்தி கொண்டு செல்கின்றனர். இப் பிரச்னையில் ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

