காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மேட்டூர் அருகே தமிழக -கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள பாலாற்றில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இப்போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேட்டூர், குள்ளவீரன்பட்டி, கொளத்தூர் சோதனைச் சாவடி, நான்குசாலை, கருங்கல்லூர், கோவிந்தபாடி, காரைக்காடு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை போலீஸார் சோதனையிட்டனர். அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். கோவிந்தபாடியில் 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பாலாறு நோக்கிச் செல்ல முற்பட்டபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து அங்கேயே அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலர் ஆசைத்தம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் காரணமாக தமிழக -கர்நாடக எல்லை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நரசிம்மா் ஜெயந்தி விழா

வேலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேன் கூடு அகற்றம்!

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

