தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

மது போதையில் தகராறு: தந்தை அடித்துக் கொலை

சேலம் அருகே மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:50 am IST

சேலம் அருகே மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அருகில் உள்ள கொண்டலாம்பட்டி பெரியபுத்தூரைச் சேர்ந்தவர் பெயிண்டர் சுப்பிரமணி (60).  இவருக்கு பூபதி என்ற மகனும், ரேவதி என்ற மகளும் உள்ளனர்.
மதுப் பழக்கம் கொண்ட சுப்பிரமணி தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இதேபோல, திங்கள்கிழமை இரவு சுப்பிரமணி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம்.  இதைப் பார்த்த அவரது மகன் பூபதி தட்டிக் கேட்டு தகராறு செய்தாராம்.  இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம்.  அப்போது சுப்பிரமணி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார் எனத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்,  சடலத்துக்கு இறுதிச் சடங்குகள் செய்யத் தொடங்கினராம்.
தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீஸார் சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி, பூபதியிடம் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.