கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் இணைந்து செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின.
கிறிஸ்தவ தேவாலயங்கள், போதகர்கள், கல்வி நிறுவனங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், புனித நூலான பைபிளை எரித்ததைக் கண்டித்தும், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்தவக் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, குழந்தை இயேசு பேராலயத்தின் மறைமாவட்ட முதல்வர் பங்குத் தந்தை கிரகோரி ராஜன் தலைமை வகித்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. கல்வி நிறுவனங்களின் தலைவர் சாந்தி பிரேம்குமார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இதயராஜ் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எந்த இடையூறும் இல்லாமல் பிரார்த்தனை செய்வது கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிறிஸ்தவர்களை எதிரானவர்களாக நினைப்பதை கைவிட்டு, கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளதை உணர வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


