எடப்பாடி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி கிராமம், தோப்புகாடு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் கணேசன் (55). மரம் ஏறும் கூலித்தொழிலாளி.
இவர் செவ்வாய்க்கிழமை மாலை அங்குள்ள காசிக்காடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் தேங்காய்ப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தென்னை மரத்திலிருந்து கணேசன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கணேசன் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








