பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சேலத்தில் ஆக.22 இல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் துவக்கம்

சேலத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்க உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்கு 36,000 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.    

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சேலத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்க உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்கு 36,000 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.    
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
சேலத்தில் இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் ஆக.22 முதல் செப்.2 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  
இந்த முகாமில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல்  அம்யூனிசன்- ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளார்க் -  ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன்  ஆகிய பிரிவுகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  
இம்முகாமில் சேலம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல்,  நீலகிரி,  திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைவதற்கு ஏதுவாக w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌m‌y.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தின் மூலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி கடைசி நாளான ஆக.6 வரை சுமார் 36,000 இளைஞர்கள் இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்தவர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும். பதிவு செய்தவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். இதனை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து முகாமிற்கு வரும் போது கட்டாயம் கொண்டு வருவதோடு உரிய ஆவணங்களையும் எடுத்து வரவேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.  இம்முகாமில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான குடிநீர்,  கழிப்பிடம்  உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும் என்றார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.