நரசிங்கபுரம் மாரியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழாவில், புதன்கிழமை மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சி மாரியம்மன், செல்லியம்மன் கோயில் திருத்தேர் விழா கடந்த 14-ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய விழாவான, மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி என்.எஸ்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. என்.பி.வேல்முருகன் முன்னிலையில் ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பொன்கார்த்திக்குமார்,நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கே.சென்னுகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் என்.கேசவன்,கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ரகோத்தமன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.வரதராஜன்,உதவி மின் பொறியாளர் என்.சேகர் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
திருத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நிகழ்ச்சியை ஊர் பெரியதனக்காரர்கள் ஈ.ராஜேந்திரன், பி.ரவிசங்கர், என்.எம்.பழனிமுத்து, என்.கே.சுப்ரமணியம், ஆர்.கந்தசாமி, கே.பிரகாஷ்,பி.சுப்ரமணி, என்.கே.பெருமாள்,என்.சி.வேணுகோபால், ஏ.அசோக், தக்கார் சண்முகம், செயல் அலுவலர் பெ.சுரேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர் அறிவிப்பு!

பட்டியலிட்ட முதல் நாளிலேயே ஷிப்ராக்கெட் பங்குகள் 48% உயர்வு!

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK
விடியோக்கள்

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK


