திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.82 அடியாகக் குறைந்தது

நீர்வரத்து சரிந்ததால்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 119.82 அடியாகக் குறைந்தது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நீர்வரத்து சரிந்ததால்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 119.82 அடியாகக் குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து, புதன்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து  நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாகச் சரிந்தது. 
காவிரி டெல்டா பாசனத்துக்கும்,  கிழக்கு, மேற்கு  கால்வாய் பாசனங்களுக்கும் அணையிலிருந்து நொடிக்கு 15, 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்தை விட, பாசனத்துக்கு கூடுதலாக நீர் திறக்கப்படுவதால் கடந்த 8 நாள்களாக நிரம்பிய நிலையில் இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, புதன்கிழமை காலை நீர்மட்டம் 119.82 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 93.18 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.