தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உள்ளிட்ட இருவர் சாவு

தலைவாசல் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி உள்ளிட்ட இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தலைவாசல் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி உள்ளிட்ட இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம்,  தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ்குமார் (25).  பட்டதாரி இளைஞர்.
இவரது பக்கத்து தோட்டக்காரர் கந்தசாமி மனைவி கந்தாயியும்(73), தினேஷ்குமாரும் சிறுவாச்சூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அண்ணா நகர் அருகே சென்றபோது  தலைவாசலில் இருந்து சிறுவாச்சூர் நோக்கிச் சென்ற அரசு  நகரப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில்,  நிகழ்விடத்திலேயே தினேஷ்குமாரும், கந்தாயியும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் செந்தில்குமாரை (35)கைது செய்து, விசாரித்து வருகிறார். 
இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.