தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தூக்குக்கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்

வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து

Updated On :25 டிசம்பர் 2018, 8:28 am IST

வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், 8-ஆவது  நாளான திங்கள்கிழமை தூக்குக்கயிறு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், சாலையோரங்களில் புதைவட முறையில் மின்சாரத்தை கொண்டுச் செல்ல மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து தங்கி, 8-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், திங்கள்கிழமை தூக்குக் கயிறு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் வழியாகச் செல்லும் மின்சாரம், கிழே வசிக்கும் விவசாயிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே அமைத்த உயர்மின் கோபுரங்களுக்கே இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் எட்டாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திய எங்களின் கோரிக்கை குறித்து கேட்பதற்கு கூட இந்த அரசு தயாராக இல்லை என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.