பெரியார் பல்கலை.யில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம்
உலக தாய்மொழி தினம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.


உலக தாய்மொழி தினம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பன்னாட்டு அமைப்பின் அறிவிப்புக்கு இணங்க பெரியார் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய்மொழி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. உலகத் தாய்மொழிநாள் கொண்டாட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலத் துறை சார்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தி.பெரியசாமி தலைமை வகித்து, தாய்மொழிநாள் உறுதிமொழியை வாசித்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் வி. சங்கீதா, தமிழ்த்துறைப் பேராசிரியர் மோ. தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...