நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாக்கடை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் சாக்கடை கலந்த மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:48 am

DIN

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் சாக்கடை கலந்த மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் ஐந்து சாலை ராம்நகர் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் மழை பெய்யும் போது மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. இதனால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. 
இந்த சாக்கடை நீர் வடியாமல் கால்வாய்களில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சாக்கடை நீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ராம்நகர் பொதுமக்கள் ஐந்து சாலை பகுதியில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. 
இதுதொடர்பாக தகவலறிந்த அழகாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களை பொதுமக்கள் சமரசம் செய்தனர். 
மழை நீர் தேங்காதபடி வழி வகை செய்வதாகவும், சாக்கடை மற்றும் கால்வாய்களில் அடைப்புகளை சரி செய்வதாகவும் உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.