தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேட்டூர் காவிரிக் கரையில் நெல் படையலிட்டு வழிபாடு

மேட்டூர் அணை நிரம்ப வேண்டி காவிரிக் கரையில் நெல் படையலிட்டு ஞாயிற்றுக்கிழமை  சிறப்புப் பூஜை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:49 am

DIN

மேட்டூர் அணை நிரம்ப வேண்டி காவிரிக் கரையில் நெல் படையலிட்டு ஞாயிற்றுக்கிழமை  சிறப்புப் பூஜை நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி சார்பில் அதன்  மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரகுநாதன் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டூர் காவிரி பாலத்தின் அடியில் தஞ்சையிலிருந்து கொண்டு வரப்பட்ட நெல்லை படையலிட்டு சிறப்புப் பூஜை செய்தனர்.  பின்னர் விதைநெல்லை காவிரியில் வீசி  அணை நிரம்பி சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரித் தாயை வழிபட்டனர். மேட்டூர் நகர த.மா.கா. தலைவர் காமராஜ், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், மாநில விவசாய அணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.