எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஓமலூர் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

ஓமலூர் அருகே மூதாட்டியிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:33 am IST

ஓமலூர் அருகே மூதாட்டியிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள வேலக்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜம்மாள் (60). கணவரை இழந்த இவர், அங்குள்ள தனியார் பள்ளியின் முன்பாக பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தலைக்கசவம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், மூதாட்டி ராஜம்மாளிடம்,  மிக்சர், தண்ணீர் பாக்கெட்,  பிளாஸ்டிக் டம்ளர் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட பொருள்களை மூதாட்டி எடுத்துக் கொடுத்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
புகாரின் பேரில் ஓமலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.