வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில் மாதம் இருமுறை மட்டுமே மேட்டூர் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வாழப்பாடி பேரூராட்சியில் அக்ரஹாரம், காமராஜ் நகர், புதுப்பாளையம், மங்கம்மாநகர், கிழக்குக்காடு, காளியம்மன் நகர், வடக்குக்காடு, செல்லியம்மன் நகர், எழில்நகர், குறிஞ்சிநகர், முல்லைநகர், அண்ணாநகர், இந்திராநகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், பெரியசாமிநகர், செல்லப்பன்நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. 15 வார்டுகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பேரூராட்சிக்கு உள்பட்ட ஒட்டுமொத்த பகுதிக்கும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செல்லியம்மன் கோயில், புதுப்பாளையம் பிரிவு சாலை, பழைய ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளில், மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் வரும், சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் தேக்கிவைத்து விநியோகிக்கப்படுகிறது. மாதத்துக்கு ரூ.72 வீதம் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வாழப்பாடி பேரூராட்சிக்கு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு மாற்று குடிநீர்த் திட்டம் ஏதும் செயல்பாட்டில் இல்லாததால், பேரூராட்சிப் பகுதி பொதுமக்கள் அனைவரும் மேட்டூர் காவிரி குடிநீரையே பிரதானமாக நம்பியுள்ளனர். இந்நிலையில், நீரேற்று நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி, மின்தடை, குடிநீர் குழாயில் உடைப்பு போன்ற காரணங்களைக் கூறி, கடந்த இரு மாதங்களாக வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதனால், குடிநீர்த் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, வாழப்பாடி பேரூராட்சிப் பகுதி மக்களின் நலன் கருதி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் கூட்டாய்வு நடத்தி, வாரத்துக்கு இருமுறை அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி, சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: வாழப்பாடி பேரூராட்சியில் மாதத்திற்கு இருமுறை கூட மேட்டூர் காவிரி குடிநீரை விநியோகிப்பதில்லை. மாற்று குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் இல்லாததால், குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இந்நிலையில், குடிநீர் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திடவும் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே, பேரூராட்சியின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் வாரத்துக்கு இருமுறை மேட்டூர் காவிரி குடிநீரை விநியோகிக்க வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான அளவிற்கு குடிநீரை விநியோகிக்காமல் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் தீர்மானத்தை ரத்து செய்து பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


