எடப்பாடி பகுதியில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தினர் ஆய்வு
தில்லியைச் சேர்ந்த தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் ஆய்வுக் குழு, புதன்கிழமை எடப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.


தில்லியைச் சேர்ந்த தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் ஆய்வுக் குழு, புதன்கிழமை எடப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையத்தின் ஆய்வுக்குழு உறுப்பினர் பிரியங்கன் தலைமையில், எடப்பாடியை அடுத்துள்ள தங்காயூர் கிராமப் பகுதியில் இயங்கிவரும் கிரானைட் குவாரிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தங்காயூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட
குழுவினர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது எடப்பாடி வட்டாட்சியர் கேசவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், மாவட்ட சுரங்கத்துறை பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...