தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜயேந்திரர் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரர் மறைவுக்கு தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:29 am

DIN

காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரர் மறைவுக்கு தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பாரம்பரியம் மிக்க காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த ஜயேந்திர சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிக்க துயரம் அடைகிறோம். ஆன்மிக மற்றும் சமய பணிகளோடு சமுதாயப் பணிகளிலும்   ஈடுபட்டு வந்தார். ஜனகல்யாண் என்ற அமைப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுக்கு குறிப்பாக பல கிராமங்களில் பல்வேறு சேவைகளை செய்து வந்தார்.
நலிவடைந்த கோயில்களை புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகங்கள் செய்து வைத்தார். தீண்டாமையையும் ஜாதி ஏற்றத் தாழ்வுகளையும் அகற்றி சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.