இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டருக்கு 5 ஆண்டு  சிறை

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 3:54 am

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேந்திரன் (51) . இவர் 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி,  பெயிண்டர் ராஜேந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் 
அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.காந்திமதி ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.